துணி வாங்க கூட காசு இல்லையா பிரபல நடிகையின் புதிய போட்டோவை பார்த்து கேள்வி கேட்கும் ரசிகர்கள் நடிகை லிசா ஹேடன் ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் போட்டு, நெட்டிசன்களிடம் செமையாக வாங்கிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்.

ஆயிஷா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் நடிகை லிசா ஹேடன். குயின், ஹவுஸ்புல் 3, ராஸ்கல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபர் டினோ லால்வாணி என்பவரை திருமணம் செய்த கொண்ட லிசாவுக்கு, ஜாக் எனும் மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தலைகாட்டி

இந்நிலையில் ஒரு செல்போன் விளம்பர நிகழ்ச்சியில் லிசா சமீபத்தில் கலநதுகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். கருப்பு நிற குட்டைப்பாவாடை ரக உடையில் இருக்கும் அந்த போட்டோவை வைத்து தான் நெட்டிசன்கள் லிசாவை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

இயல்பாகவே ஒல்லியான தேகம் கொண்ட லிசாவின் கால்கள், அந்த புகைப்படத்தில் மேலும் ஒல்லியாக தெரிகின்றன. இதை பார்த்த அவரது பலோயர்கள், “ஏதாவது சாப்பிடக்கூடாதா லிசா. பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல இருக்கீங்களே”, என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், இவ்வளவு ஒல்லியான உருவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் லிசாவுக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலித்துள்ளது. “உடலை வைத்து ஒருவரை அசிங்கப்படுத்தக் கூடாது. குறிப்பாக பெண்களின் உடல்வாகு, ஹார்மோன் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு விதமாக மாறும். ஒரு பெண் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும், அவள் எப்போதுமே அழகு தான்”, என ஒருவர் தெரிவித்துள்ளார்.

லிசா ஹேடனின் ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரு பெண்ணை தேகத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது என்ற வாதமும் வலுத்து வருகிறது. லிசாவின் இந்தப் புகைப்படத்தை மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.