லாஸ்லியாவிற்கு போட்டியாக பிக்பாஸில் கலந்து கொள்ளும் புதிய போட்டியாளர்-லாஸ்லியாவின் கதி
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது இந்த நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது தற்போது இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதா விஜய்குமார் வெளியேற்றப்பட்டார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் அனைத்து விதமான மக்களின் மனதில் இடம்பிடித்தவர் லாஸ்லியா இவர் எந்த வித பிரச்சினை இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தவில்லை இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் பலர் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் இவர் தான் என பலர் கூறிவருகின்றனர்.தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக யார் வருவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சின்னத்திரை தொடர் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர் ஆலியா மானாஸா இவர் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் வந்தால் கட்டாயம் லாஸ்லியவிற்கு போட்டியாக இருப்பார்.