பிக்பாஸ் நிகழ்ச்சி
தற்போது அனைத்து மொழிகளிலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே முதன் முதலாக இந்தி மொழியில் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழகளில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

காயத்ரி குப்தா
காயத்ரி குப்தா தெலுங்கு சினிமா உலகில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி போலிசாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை கூறி புகார் அளித்து உள்ளார்.அவர் கூறிய கருத்து தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகாத உறவு
என்னிடம் பிக்பாஸ் குழுவினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.நானும் சரி என கூறினேன் அதற்கு அவர்கள் நீங்கள் 100 நாட்கள் அங்கே இருக்க வேண்டும் அந்த நாட்களில் மற்ற போட்டியாளர்களுடன் காதல் மற்றும் பல அந்த மாதிரி செயல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் தற்போது நான் போலிசாரிடம் புகார் அளித்து உள்ளதாக கூறி உள்ளார்