இந்த ஒரு காரணத்தினால் தான் இயக்குநர் விஜயுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது அமலா பால் கூறிய உண்மை நடிகை அமலா பால் தனது முன்னாள் கணவரான இயக்குநர் விஜயை விவாகரத்து செய்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

படம் 2 நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில் நடிகை அமலா பால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை அமலா பால் பகிர்ந்து கொண்டார்.

அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குநர் விஜய் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜய் குறித்தும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, டைரக்டர் விஜய் இனிமையானவர். திருமணம் செய்துகொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். எங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தன.

திருமணமானபோது எனக்கு 23 வயது. திருமண வாழ்க்கை குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. இருவரும் பிரபலமானவர்கள். இதனால் எங்களின் வாழ்க்கை எங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது.

இதனால் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து எனது சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. ஆனால் நிறைய நண்பர்களை இழந்துவிட்டேன். நெருக்கமாக பழகிய பலர் என்னை எதிரியைப் போன்று பார்த்தார்கள்.

இதைத்தொடர்ந்து இமய மலைக்கு சென்றேன். அங்கு கிடைத்ததை சாப்பிட்டேன். மலைப்பகுதியில் தரையில் படுத்து தூங்கினேன். இமய மலை பயணம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

இப்போது வாழ்க்கையில் நிறைய முதிர்ச்சியும் பக்குவமும் ஏற்பட்டு உள்ளது. சாதாரண பெண்ணாக வாழவே விரும்புகிறேன். நான் வாங்கிய விலை உயர்ந்த காரையும் விற்றுவிட்டேன்.

திருமணத்தின் மீது எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை. திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு நடிகை அமலா பால் கூறினார்.