அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் அதிக ஹிட்டடித்த படம். இப்படத்தின் வசூலை தாண்டி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் என்று முதலில் கூறினர், இப்போது தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துவிட்டனர்.

வியாழக்கிழமை ரிலீஸ், பின் சனி-ஞாயிறு, அடுத்து 12ம் தேதி பக்ரித் விடுமுறை, இரண்டு நாள் கழித்து வியாழக்கிழமை 15ம் தேதி சுதந்திர தினம்.

பிறகு அடுத்தே சனி-ஞாயிறு, ரிலீஸ் தேதியை அடுத்து தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் இப்படம் வசூலில் மாஸ் வேட்டை நடத்தும் என்று கணித்துள்ளனர்.