ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் தெரியுமா ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில், உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்துடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஐ.சி.சியின் தரவரிசைப் பட்டியில் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்தன.

ஆனால், லீக் ஆட்டங்கள் பாதி முடிவடைந்த நிலையில் சில தோல்விகள் காரணமாக இங்கிலாந்து அணி 2வது இடத்திற்கு பின் தங்கியது. எனினும், இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதால் புள்ளிகள் அடிப்படையில் மீண்டும் முதல் இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியது.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ள நிலையில், 122 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்தில் நீடிக்கிறது.

தரவரிசைப் பட்டியல்
இங்கிலாந்து – 125 புள்ளிகள்
இந்தியா – 122 புள்ளிகள்
நியூசிலாந்து – 112 புள்ளிகள்
அவுஸ்திரேலியா – 111 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா – 110 புள்ளிகள்
பாகிஸ்தான் – 97 புள்ளிகள்
வங்கதேசம் – 90 புள்ளிகள்
இலங்கை – 79 புள்ளிகள்
வெஸ்ட் இண்டீஸ் – 77 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் – 59 புள்ளிகள்