தனது முதல் படத்தில் நடிப்பதற்காக வீட்டிலே நடிப்பு பயற்சி எடுத்துவருகிறார் .சுமார் முப்பது கோடி செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கப்போகிறாராம் .அருள் அண்ணாச்சி க்கு யார் ஹீரோயின்? அங்குதான் அண்ணாச்சிக்கு தலைவலி , நடிகை நயன்தாராவை அணுகி இருக்கிறார்கள் அம்மணி முதல் முயற்சியிலேயே முட்டுக்கட்டை போட்டு விட்டார் .

அடுத்து அவருடன் விளம்பரத்தில் நடித்த ஹன்சிகா , தமன்னா ,காஜல் அகர்வால் , உள்ளிட்ட பலரும் ஓட்டம் எடுத்தாக கூறப்படுகிறது . விளம்பரம் வேறு சினிமா வேறு என கூசாமல் மறுக்கும் இவர்க்ளுக்கு ஆத்திரமூட்ட முடிவெடுத்துள்ளார் அருள் அண்ணாச்சி.மும்பை டாப் ஹீரோயின் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு வருகிறாராம் .

இந்த படத்திற்கு இயக்குனர் யார் தெரியுமா ? அண்ணாச்சியின் விளம்பர படங்களை எடுத்து வரும் ஜேடி மற்றும் ஜெரிதான்