பிக்பாஸ் வீட்டில் அடுத்த வனிதா யார் தெரியுமா சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக வலம் வந்தவர் வனிதா. தான் மட்டும்தான் பேச வேண்டும், பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்ற ரீதியிலேயே பேசி வந்தார்.

மற்றவர்கள் பேசுவதை ஒருபோதும் அவர் காது கொடுத்து கேட்டதில்லை. மேலும் சிறிய பிரச்சனைகளை கூட பெரிதாக்கி வீட்டையே அதகளப்படுத்தி வந்தார்.

மேலும் ஒருவர் சொல்வதை மற்றவரிடம் போட்டுக்கொடுத்து பிரச்சனையை கிளறி வந்தார் வனிதா. பின்னால் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார் வனிதா.இதனால் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வந்தனர். வனிதாவை முதலில் வெளியேற்றுங்கள் என போராட்டம் நடத்தாதக் குறையாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

எப்போது வனிதா எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வருவார் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என காத்திருந்தனர் ரசிகர்கள். கடந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ்களால் வனிதா, மீரா, சரவணன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகிறய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

அவர்களில் மோகன் வைத்யா சனிக்கிழமையே காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்றைய எபிசோடில் சரணவன், மதுமிதா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

இதனால் வனிதாவும் மீராவும் மட்டும் லிஸ்டில் இருந்தனர். கமல் அறிவிக்கும் வரை தான்தான் வெளியேறப்போகிறோம் என்ற எண்ணமே இல்லாமேல் தெனாவட்டாக இருந்தார் வனிதா.

ஹவுஸ் மேட்ஸ்களுக்கு உங்கள் இருவரின் அட்வைஸ் என்ன என கேட்டார் கமல். அப்போது பேசிய வனிதா, ஏற்கனவே கூறிவிட்டேன் சார், அங்கு அழையுங்கள் வந்து சொல்கிறேன் என்றார்.

அப்போது சற்றும் தயக்கம் காட்டாமல் பட்டென ஓகே இங்கே வாருங்கள் வனிதா என்று எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். அதனை பார்த்து ஷாக்கான வனிதா, நம்ப முடியாமல் நன்றாக தானே விளையாடினேன் என்று கூறியபடியே வெளியேறினார்.

சனிக்கிழமை முதலே வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் றெக்கை கட்டிப்பறந்தன. இருப்பினும் நேற்றைய எபிசோடில் வனிதாவின் எவிக்ஷன் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தினமும் ஒருவருடன் சண்டை போட்டு ஏழரையை கூட்டி வந்தார் வனிதா.