பிரபல நடிகையிடம் மிக கேவலமாக அசிங்கப்பட்ட பிக் பாஸ் ஆரவ்! வெளிவரும் உண்மை தகவல் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவின் காதலராக மாறிய ஆரவ், டைடில் வின்னராகி பிரபலமானார். மாடலிங் துறையில் மூன்றாம் நிலையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்று தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

’ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆரவ், நடிகை ஒருவரிடம் அசிங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தை பிரபல இயக்குநர் சரண் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நிகிஷா படேல் நடிக்கிறார். காட்சிப்படி நிகிஷா பட்டேல் ஆரவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும். இயக்குநர் சரண், இது குறித்து நிகிஷாவிடம் கூறியிருக்கிறார். ஆனால், அறிமுக நடிகருக்கு முத்தம் கொடுப்பதா? என்று யோசித்த நிகிஷா பட்டேல், ஆரவுக்கு முத்தம் கொடுக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே காட்சி குறித்து இயக்குநர் அனைவரிடமும் விவரித்துவிட்ட நிலையில், முத்தம் கொடுக்க நிகிஷா மறுப்பு தெரிவித்ததால் ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். மேலும், படக்குழுவில் உள்ள அனைவர் முன்பும் அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆரவுக்கும் அசிங்கமாகிவிட்டதாம்.

காட்சியின் முக்கியத்துவம் குறித்தும், கதையில் அந்த காட்சியின் முக்கியத்துவம் குறித்தும் இயக்குநர் தனியாக நிகிஷாவிடம் எடுத்து கூறிய பிறகு புரிந்துக்கொண்ட நிகிஷா, முத்தம் கொடுக்க சம்மதித்து, லிப் டு லிப் கிஸ் கொடுத்தாராம்.