அரசியலில் கால் பதிக்கும் சத்தியராஜின் மகள் அதுவும் எந்த துறையில் தெரியுமா நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி வரும் சத்யராஜ் பொது நலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சத்யராஜ்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் தமிழில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து கோவை பிரதர்ஸ், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சத்யாராஜின் மகள் திவ்யா, இவர் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

அண்மையில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவ துறையில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டார். ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

அதற்காக அரசு மருத்துவமனைகளில் நடத்திய ஆராய்ச்சியின் படி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அரசு மருத்துவமனைகள் தூய்மையாக இல்லை என்ற திவ்யா அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். தான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் சுகாதாரத்துறையின் மீது தனக்கு அதிக கவனம் இருப்பதாக கூறிய திவ்யா அரசியலுக்கு வந்தால்தான் நினைப்பதை செய்ய முடியும் என்றார்.

சிறு வயதில் இருந்தே தனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம் என்று கூறிய திவ்யா, விரைவில் அரசியலுக்கு வரும் ஐடியா உள்ளது என்றார். ஏற்கனவே நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகரின் மகளும் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.