இந்த வார வெளியேற்றம் மோகனுக்கு பதிலாக வெளியேறியது இவரா வெளிவரும் உண்மை தகவல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நாமினேஷனில் இந்த வாரம், மீரா மிதுன், மதுமிதா, சரவணன், வனிதா, மோகன் வைத்தியா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் மோகன் வைத்தியா தான் எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது வனிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

காரணம், வனிதா தான் பிக்பாஸ் வீட்டின் மிகப்பெரிய டீஆர்பிக்கான கண்டஸ்டண்ட். அப்படி இருக்கையில் அவர் இந்த வாரம் வெளியேறினால், அடுத்து பிக்பாஸ் டீஆர்பி குறைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால், தற்போது வந்த தகவலின் படி, வனிதா வெளியில் போகவே அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வனிதாவை எதிர்த்து தான் மக்கள் நிறைய ஓட்டு போட்டதாக கூறப்படுகிறது

எப்படியிருந்தாலும் நாளை யார் வெளியேறுகிறார்கள் என உறுதியாகிவிடும். அதேவேளை வனிதா வெளியேறும் பட்சத்தில், வனிதாவிற்கு சரிசமமாக மற்றொரு புதிய போட்டியாளர் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது