தமிழ் சினிமாவில் பல சில்வர் ஜூப்ளி படங்களை இயக்கியவர் சுந்தர்ராஜன் அவர்கள். இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான பயணங்கள் முடிவதில்லை 250-நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜனும், பாக்யராஜூம் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் உள்ளூரில் நிறைய நாடகங்களை இயக்கி மேடை ஏற்றியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாக்யராஜ் அவர்கள் சென்னைக்கு வந்து 16-வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றினார்.

அப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் அவர்கள் பின்னர் பாரதிராஜாவின் ஆசியுடன் அவரிடமிருந்து பிரிந்து வந்து படம் இயக்க துவங்கினார். அதே சமயம் தான் இயக்கிய புதியவார்ப்பும் படத்தின் மூலம் பாக்யராஜை ஹீரோவாக்கினார் பாரதிராஜா அவர்கள்.

இந்நிலையில் பாரதிராஜாவிடமிருந்து நான் வெளியே வந்துவிட்டதால் அவருக்கு உதவியாளர் பணிக்கு ஆள் தேவைப்படுகிறது. அதனால எப்படியாவது அவரிடம் பேசி உன்னை அவரிடம் அசிஸ்டென்டா சேர்த்து விடுகிறேன் என தன் நண்பர் சுந்தர்ராஜனிடம் கூறியுள்ளார் பாக்யராஜ்.

அப்போது தனது அலுவலகத்தில் இருந்த சுந்தர்ராஜனிடம் கதையில் கொஞ்சம் சிக்கல் இருப்பதாகவும் பாரதிராஜா சார் வந்து என்னை கேட்டா இப்ப வந்திருவார்னு சொல்லு நான் போய் சட்டையை மாத்திட்டு வந்திடுறேன். அவர்கிட்ட வேறு எதுவும் பேசவேண்டாம் என்று கூறிச் சென்றுள்ளார் பாக்யராஜ்.

பாக்யராஜ் கூறியபடியே பாரதிராஜா அலுவலகத்திற்கு வந்தார். ராஜா இப்ப வந்துருவான் சார் என பாரதிராஜாவிடம் கூறினார் சுந்தர்ராஜ். பாரதிராஜா அமைதியாக அமர்ந்திருந்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ராஜா வெளிய போயிட்டான் போல. கதையில கொஞ்சம் சிக்கல் இருக்கறதா நீங்க நினைக்கிறதா சொன்னாதாக பாரதிராஜாவிடம் கூறியுள்ளார் சுந்தர்ராஜன்.

மேலும் ஒரு பிரச்சனையும் இல்ல சார். கதையை சரி பண்ணிடலாம் என்று சுந்தர்ராஜன் சொல்ல, இதை கேட்ட பாரதிராஜா கோபமாகிவிட்டார். பின்னர் இதை அறிந்த பாக்யராஜ் சுந்தர்ராஜனிடம், உன்னை அமைதியா இருக்கச் சொன்னேன். கேக்கல. டைரக்டர் செம கோபமாகிவிட்டார். அப்புறம் எப்படி அவர்கிட்ட சேர்த்துவிட முடியும்? என்று கூறியுள்ளார்.

இருப்பினும் எந்த ஒரு இயக்குநரிடமும் உதவியாளராக சேராமல் தனது திறமையின் மூலம் இயக்குநரானார் சுந்தர்ராஜன் அவர்கள். இவரது இயக்கத்தில் முதல் முதலாக 1982-ம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி தமிழ் சினிமாவே இவரை திரும்பி பார்க்கும்படி சாதித்து காட்டினார்.