சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பேய் டாஸ்க்கை பார்த்த ரசிகர் ஒருவர் எத்தனை பேய்கள் வந்தாலும் அந்த பேய் போல் வராது என பிக்பாஸ் முதல் சீசன் குறித்து தெரிவித்துள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நமீதா, ரைசா, காயத்ரி ரகுராம், ஆரவ், சக்தி, கஞ்சா கறுப்பு என பலர் கலந்துகொண்டனர்.

முதல் சீசன் என்பதால் அனைவரும் தங்களின் ஒரிஜினாலிட்டிபடியே நடந்து கொண்டனர். ஜூலி, காயத்ரி உள்ளிட்டவர்கள்தான் படுகேவலமாக நடந்துகொண்டு தங்களின் பெயரை டேமெஜ் செய்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடிப்பது போல் தெரிகிறது. தற்போது தமிழில் பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியில் ஃபாலோ செய்த ஃபார்மெட்டையே தமிழிலும், அதுவும் மூன்று சீசன்களிலும் ஃபாலோ செய்து வருகிறார் பிக்பாஸ். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொலையாளி டாஸ்க் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் பேயாக மாறுமாறு அறிவுத்தப்பட்டது.

இதைததொடர்ந்து சாக்ஷி, மோகன் வைத்யா, ஷெரின், ரேஷ்மா, கவின் ஆகியோர் பேய் டிரெஸுடன் மயானம் போன்று அமைக்கப்பட்ட செட்டில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த சீசனின் பேய் டாஸ்க் குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டியுள்ளார்.

அதாவது பல பேய்கள் வரலாம் போகலாம், ஆனால் ரைசா வில்சன் பேய்தான் மனதில் எப்போதும் இருப்பார் என ரைசா பேய் டிரெஸில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும் அட போங்கய்யா நாட்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய பேய் டாஸ்க்கை திட்டியும் உள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ரைசா எப்போதும் மேக்கப் போட்டுக்கொண்டே இருப்பார். கையில் மேக்கப் கிட் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது. அதேபோல் அட போங்கய்யா என்ற வார்த்தையை அவரது ட்ரேட் மார்க்காக வைத்திருந்தார். அந்த வார்த்தையை கூட மறக்காமல் இந்த ரசிகர் டிவிட்டியிருப்பது அவர் ரைசாவின் தீவிர ரசிகர் என்பதை காட்டுவதாக உள்ளது.