தமிழ் சினிமாவில் தற்சமயம் பீக்கில் இருக்கும் காமெடி நடிகரான யோகி பாபுவின் நடிப்பில் மாதத்திற்கு ஒரு படமாவது வெளியாகிவிடுகிறது.

காமெடியனாக மட்டுமில்லாமல் கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்துவிட்டார். குறிப்பாக கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கவனத்தை பெற்றார்.

தற்போது நயன்தாராவிற்கு அடுத்ததாக அஞ்சலியை துரத்தி துரத்தி காதலிக்கவுள்ளார், யோகிபாபு. கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ள இப்படத்தில் பேஸ்கட்பால் பயிற்சியாளராக அஞ்சலி நடிக்க, அவரை காதலிக்கும் கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார்.

யோகிபாபு, அஞ்சலியுடன் என்னம்மா ராமரும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.