வீட்டை கூட மீட்க முடியாத நிலையில் கடன் சுமையால் அல்லோலப்படும் நடிகை விஜயலட்சுமி! இவருக்கா இப்படி விஜய் நடித்த பிரென்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை விஜயலக்ஷ்மி. அதன்பிறது பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் கன்னட சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை ஐசியூவில் இருப்பதாக செய்திகள் வந்தது. அவர் பணமின்றி தவித்ததால் நடிகர் சுதீப் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.

இந்நிலையில் விஜயலக்ஷ்மி ஒரு வீடியோவெளியிட்டுள்ளார். அதில் பலரும் தான் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என கூறியுள்ளார். பேச்சில் தமிழ் தெரிகிறது என கூறி நிராகரிக்கிறார்களாம். தற்போது வீடு கூட இல்லாமல் தன்னுடைய தோழி வீட்டில் தங்கியிருப்பதாக உருக்கமாக பேசியுள்ளார் அவர்.