கட்டுக்கடங்காத போதையில் யாஷிகா லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர் வீடியோ வைரல் போதையில் லைவ் சாட் செய்த யாஷிகாவிற்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா. இவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டதால் மக்களிடையே இன்னும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இவரும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆகினர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து இருவரும் நல்ல தோழிகளாகவே உள்ளனர். தற்போது கை நிறைய படங்களில் இருவரும் நடித்து

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் முதலாம் ஆண்டை, அவர்கள் இருவரும் சமீபத்தில் கொண்டாடினர். இருவருக்குமே சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். எனவே தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் விதமாக அப்போது லைவ் சாட்டிங் செய்தனர்.

 

அப்போது இருவரும் நல்ல போதையில் இருந்ததாகத் தெரிகிறது. ரசிகர்களின் கேள்விகளுக்கு இருவரும் சிரித்தபடியே பதில் சொல்லிக் கொண்டும், மாற்றி மாற்றி தங்களுக்கு தாங்களே வாழ்த்து தெரிவித்தபடியும் இருவரும் இருந்தனர். இந்த லைவ்வில் இருவரும் எதிர்பார்க்காத வேளையில் இரண்டு ஆண் நண்பர்கள் தோன்றுகின்றனர்.

அவர்களில் ஒருவர் அதிரடியாக யாஷிகாவுக்கு லிப்லாக் தருகிறார். உடனே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சிரித்துக் கொண்டே லைவ்சாட் செல்வதாகக் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாஷிகாவிற்கு முத்தம் கொடுத்தவர் அவரது நண்பர் நிரூப் எனக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, யாஷிகா நடிகர் மகத்தைக் காதலித்தார். மஹத்திற்கு வெளியில் காதலி இருந்தபோதும், அவரும் யாஷிகாவைத் திருப்பிக் காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். இதனால் அவரது காதலி கோபமடைந்தார். பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த மஹத் தனது காதலியை சமாதானம் செய்தார். ஆனாலும், தான் தொடர்ந்து மஹத்தைக் காதலிப்பதாகக் கூறினார் யாஷிகா என்பது குறிப்பிடத்தக்கது.