சென்னை: ஆடை படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பது தொடர்பாக நடிகை அமலாபால் பேசியுள்ளார்.

நடிகை அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் படத்தில் அமலாபால் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது.அதில் பார்ப்பவரிடம் எல்லாம் பெட் கட்றீயா என கேட்பதோடு, தம், தண்ணி என இருந்தார் அமலா பால். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆடை படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பாலின் தைரியத்தையும் துணிச்சலையும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை அமலா பாலிடம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக நிர்வாணக் காட்சியில் நடித்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமலா பால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.

ஆடை படத்தை பார்த்துவிட்டு இந்தி டைரக்டர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் கூறினார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் நிர்வாணமாக நடித்ததில்லை. தற்போது ஆடை படத்தில் அமலா பால் துணிந்து அந்த வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.