எப்போதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல இந்திய சினிமா நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி பிரபல ஹிந்தி திரைப்பட நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பவுலரான பும்ராவும் பிரேமம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து முதலில் கருத்து தெரிவித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே நாங்கள் இதுவரை எங்கும் சுற்றுலா சென்றது கிடையாது என கூறி உள்ளார் ஆனால் இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இதே கேள்விக்கு பதில் அளித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மட்டுமே எனக்குத் தெரியும் எனக் கூறியிருந்தார் இதனால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என குழம்பிப் போயுள்ளனர் ரசிகர்கள்.