தனது பிள்ளைகளுக்காக தமிழ்நாட்டை விட்டே சென்ற நடிகை குயிலி-ஏன் தெரியுமா இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் குல்நார் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை குயிலி அவர்கள். இருப்பினும் ரசிகர்களுக்கு இவரை அடையாளம் காட்டியது மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் கமல் நடித்து இமாலய வெற்றி பெற்ற நாயகன் திரைப்படமே.

அப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. நாயகன் படத்திற்கு முன்பு நடிகர் முரளிக்கு ஜோடியாக பூவிலங்கு என்ற படத்தில் நடித்தார் குயிலி அவர்கள். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் 1990-ம் ஆண்டு வெளியான அதிசய மனிதன் படத்திற்கு பிறகு திருமணம் செய்து விட்டு தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.

பிறகு 9-வருட இடைவெளிக்கு பிறகு ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பாலசந்தர் அவர்களின் காசளவு நேசம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையிலும் எண்ட்ரி ஆனார். சின்னத்திரையிலும் பல மெகாசீரியல்களில் நடித்தார் குயிலி அவர்கள்.

சின்னத்திரையில் இயல்பான அம்மாவாக நடித்த குயிலிக்கு தாய்மார்களிடம் தனி வரவேற்பு உள்ளது. குடும்பத்தில் இருக்கும் அம்மாக்கள் எந்த மாதிரியான ரீயாக்ஷனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மனதில் மனதில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறேன். அதனால்தான் என்னுடைய நடிப்பு குடும்ப பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது என்று கூறியுள்ளார் குயிலி.

குயிலியின் குழந்தைகள் மும்பையில் படித்து வருகிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. குழந்தைகள் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகிவிட்டாராம். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் காவியத்தலைவன். அதேபோல் கடைசியாக இவர் நடித்த சீரியல் கல்யாணம் முதல் காதல் வரை என்பது குறிப்பிடதக்கது.

அரசியல், குடும்பம் என வேலை பளு அதிகமாகி விட்டதால் சின்னத்திரை சீரியல்களிலிருந்து விலக முடிவு செய்து விட்டார் குயிலி. அதே நேரத்தில் சினிமாவில் நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்.

அப்போ அலட்டல் மாமியாரை பார்க்க முடியாதா என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள். அப்பாடா தப்பித்தோம் என்கின்றனர் குயிலி செய்யும் ஓவர் ஆக்டிங் பிடிக்காதவர்கள்.