செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடிய அமலாபால் இப்போது தமிழ் திரையுலகில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய மார்க்கெட் இல்லை என்றாலும், அப்படி ஒன்று இருப்பதாக கருதி கொண்டு சீன் போடும் நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். முதலில் சர்ச்சையான படங்களில் நடித்தவர் படி படியாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க தொடங்கியதும், இவர் குறித்து பல செய்திகள் வெளியாகின. அமலா பால், இளம் நடிகர் ஒருவர் மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்தார் என்றும் பேச்சு அடிபட்ட நிலையில், தொழிலதிபர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து மேலும் பரபரப்பை உருவாக்கினார் .அமலா பால், நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் டீசர் மூலம் அமலா பால் ஏற்படுத்திய சர்ச்சை முந்தைய சர்ச்சைகளை எல்லாம் தூக்கி ஓரங்கட்டி விட்டது. அதற்கு காரணம், ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவர் நடித்த அந்த காட்சி தான்.

அமலா பால் ஆடை இல்லாமல் நடித்ததால் அந்த டீசரும், டிரைலரும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று சென்னையில் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை அமலா பால், புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்ற போது அலட்சியம் காட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து போயுள்ளார். ஆயினும் , பிறகு அவரிடம் பேசி புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க செய்தார்கள் .அதனைத்தொடர்ந்து வேறு சில முன்னணி நாளிதழ் நிருபர்கள் அமலா பாலை பேட்டி எடுக்க முயற்சித்த போது, அதற்கும் அமலா பால் மறுப்பு தெரிவித்துவிட்டு, அவர்களின் கண்ணில் படமால், படப்பிடிப்பு இருக்கிறது, என்ற வழக்கமான பதிலை சொல்லிவிட்டு தப்பித்து கொண்டார் .அவர் ஏன் இப்படி ஓடுகிறார், என்று விசாரித்ததில், அவரது முன்னாள் கணவர் விஜய்க்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது . அது குறித்து செய்தியாளர்கள் எதாவது கேள்வி கேட்க போகிறார்கள் என்றும், ஆடை இல்லாமல் நடித்தது குறித்த கேள்விகளை தவிர்ப்பதற்காகவும் தான் அவர், செய்தியாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடியதாக பேசப்படுகிறது.