மீரா மிதுன் கலக்கும் போத ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர் இதோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது. இன்று அல்லது நாளை தெரிந்துவிடும். தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் இரண்டாம் நாள் வந்த மிரா மிதுன் பலருக்கும் முரண்பட்டவராக தெரிகிறார்.

மாடலிங்கில் வெளியே அவர் மீது இருந்த பண மோசடி புகார்களை எடுத்து வந்து உள்ளே பேசிய சாக்‌ஷியும், அபிராமியும் ஆரம்பித்தது தற்போது மனதுக்குள் பகை போலாகிவிட்டது.

அதோடு மீரா மிதுன் யார் சொல்வதையும் கேட்காமல் தன் போக்கில் இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் தான் வெளியேறுவார் என்று விமர்சனங்களும் வருகிறது.

தற்போது அவரின் நடிப்பில் வெளியாக போத யேறி புத்தி மாறி என்ற படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் எடுத்துள்ள இப்படத்தில் பல அறிமுகங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.