சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் இனி சேரனிடம் தான் பேசப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சகுனி வேலை செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். நியூட்ரலாக நேர்மையாக உள்ளவர்களை டார்கெட் செய்வதும் கார்னர் செய்வதும் இவருக்கு கை வந்த கலை.

நல்ல ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களை பிரித்துவிடுவது, தனக்கென ஒரு குரூப் ஃபார்ம் செய்துகொண்டு அவர்களை மற்றவர்களுக்கு எதிராக உசுப்பேற்றிவிடுவதுதான் பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்து வரும் ஃபுல் டைம் ஜாப்.

யாரெல்லாம் மக்கள் ஆதரவை பெறுவார்கள் என்று சரியாக கணக்கு போடும் வனிதா, அவர்களை வெளியேற்றுவதிலும் பிரச்சனையில் சிக்க வைத்து கேரியரை காலி செய்வதிலும் கை தேர்ந்தவராக உள்ளார்.

அந்த வகையில் மதுவை சகட்டு மேனிக்கு ஆசை தீர வச்சு செய்தனர் வனிதா அன்ட் கோ. அவரது அடுத்த டார்கெட் சேரன் தான் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடிலேயே தெளிவாக தெரிந்தது.

காரணம் முகெனை சேரனுக்கு எதிராக உசுப்பேற்றிவிட்டார், பிறகு மோகன் வைத்தியாவிடமும் சென்று சேரனின் கிளினீங் குறித்து கம்ப்ளைன்ட் செய்தார்.

ஆனால் வனிதாவின் இந்த சில்லியான எந்த பூச்சாண்டிக்கும் அஞ்சாத சேரன், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கேப்டன் தான் சொல்ல வேண்டும் என்றார். இது ஒன்று போதாதா வனிதா தகதிமிதா ஆட? அவ்வளவுதான்.. சேரனிடம் இனிமே நான் எதுவும் பேசப்போவதில்லை. அப்படி இப்படி என தனது கேங்க் உறுப்பினர்களிடம் கூறினார் வனிதா.

உண்மையாகவே வனிதா சேரனிடம் மட்டும் அல்ல பிக்பாஸ் ஹவுஸில் யாரிடமும் பேச போவதில்லை என முடிவெடுத்தாலும் சந்தோஷம்தான். வனிதா பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இன்றி வீடே அமைதியாகிவிடும் என்கின்றனர் ரசிகர் பெருமக்கள்..!