தர்சனுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமே இந்த பெண் தான் : இவர் யார் தெரியுமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்த இரண்டு பிரபலங்களில் ஒருவர் தான் தர்ஷன், இவருக்கு பெண்களின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இவர் தற்போது வரை பெரிதாக பேசிக் கொள்ளும் படி எதுவும் செய்யவில்லை என்றாலும், தன்னுடைய க்யூட்டான சிரிப்பின் மூலம் அங்கிருக்கும் பெண்களை மயக்கி வருகிறார் என்றே கூறலாம்.

இந்நிலையில் அவரை வைத்து போட்டோ ஷூட் நடத்திய ஜோவி அளித்துள்ள பேட்டியில் தர்ஷண் குழந்தை போன்றவர், நல்ல பையன் திட்டினால் அழுதுவிடுவான்

அவரின் கெட்ட குணம் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவது, அனைவரையும் நம்புவது. பிக்பாஸ் வீட்டிலும் அவர் நிஜமாக தான் உள்ளான். அவனும் நடிகை சனம் ஷெட்டியும் நெருங்கிய நண்பர்கள்.

தர்ஷணை போட்டோ ஷூட் செய்யவைத்ததும் சனம் தான். அவரின் படத்திலும் அவன் நடிக்க வாய்ப்பு வாங்கிகொடுத்தார். அதே போல பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே சனம் ஷெட்டி தான்.

அவன் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறான் என ஜோவி கூறியுள்ளார்.

ஜோவி சன்னிலியோன், ராக்கி சாவல் என பல பிரபலங்களை போட்டோ ஷூட் செய்தவர்.