தனது கணவரை பற்றிய வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய நடிகை திருவனந்தபுரம்: கணவரை காணவில்லை என்று பதறிப்போய் வீடியோ வெளியிட்ட மலையாள நடிகை ஆஷா சரத்தை ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

த்ரிஷ்யம் மலையாள படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் ஆஷா சரத். அவர் எவிடே என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தனது கணவரை சில நாட்களாக காணவில்லை என்றும், அவரை பற்றி தகவல் அறிந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆஷாவின் கணவர் நிஜமாகவே காணாமல் போய்விட்டார் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.

பலர் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். உங்களின் கணவர் நிச்சயம் வீடு திரும்புவார், தைரியமாக இருங்கள் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த வீடியோ அவரின் எவிடே படத்திற்கு விளம்பரம் தேட வெளியிடப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

எவிடே படத்தில் ஆஷா காணாமல் போன தனது கணவரை தேடுவது தான் கதை. படத்திற்கு விளம்பரம் தேட இப்படித் தான் நடிப்பதா என்று கூறி ரசிகர்களும், நெட்டிசன்களும் ஆஷாவை விளாசியுள்ளனர்.

அவரின் ரசிகர்களோ, த்ரிஷ்யம் படம் பார்த்த பிறகு உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தோம். இந்த வீடியோவை பார்த்து அது உண்மை என்று நினைத்து கவலைப்பட்டோம். ஆனால் விளம்பரத்திற்காக இப்படி நீங்கள் செய்ததை பார்த்து வெறுத்துப் போய்விட்டோம். இனிமேல் உங்களின் படத்தை பார்க்கவே மாட்டோம்.

நீங்கள் திறமையான நடிகை தான். அதை திரையில் காட்டுங்கள். அந்த திறமையை வைத்து ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது. இந்த அளவுக்கு இறங்கி தான் விளம்பரம் தேட வேண்டுமா?. ரசிகர்களின் உணர்ச்சியுடன் விளையாடும் உங்களின் படங்களை நாங்கள் புறக்கணிக்கிறோம். இனி நீங்கள் நிஜமாகவே உங்கள் கணவர் காணாமல் போய் வீடியோ வெளியிட்டாலும் யாரும் நம்ப மாட்டோம். நீங்கள் செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நல்லா இருங்க, உங்களின் படங்கள் நன்றாக ஓடட்டும், வாழ்த்துக்கள் என்று கோபமாக தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்கள் என்று கோபமாக தெரிவித்துள்ளனர்.