பெரிய ஹீரோகளை கண்டு தெறித்து ஓடும் சாய் பல்லவி ஏன் தெரியுமா தெலுங்கு திரையுலகில் சாய் பல்லவியை மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க வைக்காமல் இருப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

பிரேமம் படம் மூலம் பிரபலமான பிறகு சாய் பல்லவி தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தினார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் சாய் பல்லவி.

இருப்பினும் அவர் தலைக்கனம் பிடித்தவர் என்ற ஒரு வதந்தி பரவியதால் அவரின் பெயர் கெட்டுப் போனது.

முன்னணி ஹீரோக்கள்
சாய் பல்லவி
தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் சாய் பல்லவி இதுவரை ஜோடி சேரவில்லை. மெகா பட்ஜெட் படங்களில் அவரை ஹீரோயின் ஆக்குவதும் இல்லை. இதற்கு காரணம் உள்ளது என்று தெலுங்கு திரையுலகில் கூறுகிறார்கள்.
கவர்ச்சி
பெரிய பட்ஜெட்

சாய் பல்லவி பார்க்க பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருக்கிறார். அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் சுத்தமாக செட்டாகாது. மேலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வைக்கும் அளவுக்கு அவரிடம் ஈர்ப்பு இல்லை. அதனால் ரூ. 100 கோடிக்கு மேல் எடுக்கும் படங்களில் சாய் பல்லவியை ஹீரோயினாக போட யாரும் தயாராக இல்லை என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் சாய் பல்லவி திறம்பட நடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவர் சரிபட்டு வர மாட்டார். மேலும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஆயிரத்தெட்டு கன்டிஷன் போடுகிறார். அவரின் கன்டிஷன்களை ஒப்புக் கொள்வதற்கு பதில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சொல்வது படி நடிக்க பல நடிகைகள் உள்ளனர் என்கிறார்கள் டோலிவுட்காரர்கள்

பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தால் மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடுவதுடன் தனது வேலை முடிந்துவிடும் என்பதால் சாய் பல்லவியும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரத் தயாராக இல்லையாம். அவரின் குணம் தெரிந்ததால் பெரிய ஹீரோக்களும் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். வந்தோம், நடித்தோம், போனோம் என்று இல்லாமல் தனது நடிப்பு பற்றி மக்கள் பல காலம் பேச வேண்டும் என்று நினைத்து சாய் பல்லவி பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்வது பலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் அவரை பற்றி இப்படி பேசுகிறார்கள்.