அட்டர் பிளாப் ஆன படத்துக்கு வெற்றிவிழா கொண்டாடிய சிவகார்த்திகேயன் :எதுக்கு இந்த விளம்பரம்? நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அதில் குறிப்பாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை “மிஸ்டர் லோக்கல்” ஆனால் அத்திரைப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களாலேயே சகிக்க முடியாமல் தியேட்டரை விட்டு வெளியே வந்து புலம்பி தள்ளினர்.

இதனால் வேற ஒரு ஐடியாவை செய்த சிவகார்த்திகேயன், நடிப்பில் சந்தித்த தோல்வியை தயாரிப்பின் மூலம் ஈடுகட்ட செய்தார். அப்படித்தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் யூடியூப் பிரபலங்களை இறக்கி படம் தயாரித்தார். ஆனால் அதுவும் கல்லா கட்டவில்லை. மாறாக கொஞ்சம் நெஞ்சம் இருந்த சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக காலி செய்தது. இதனால் ஊருக்குள்( கோலிவுட்) பலரும் எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை என்றெல்லாம் கிண்டடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தான் சந்தித்த தோல்வி வெளியில் பரவிவிட்டால் அடுத்தடுத்த மார்கெட் டேமேஜ் ஆகிவிடும் பின்னர் ஒருவரும் வாய்ப்பு தரமாட்டார்கள் என்பதை சுதாரித்துக்கொண்ட அவர் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் வெற்றி விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இப்படத்திற்கு ஷீல்டு எல்லாம் எதுவும் தரப்படவில்லை. மேடையில் படக்குழு தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டார்கள். சிவகார்த்திகேயன் அமைதியாகவே இருந்தார். ஆனால் இப்படத்தில் நடித்த மூத்த நடிகர்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவும் இல்லை, கௌரவிக்கப்படவும் இல்லை. இது கோலிவுட் வட்டாரங்களில் கிண்டலாக பார்க்கப்பட்டு வருகிறது.