அப்ப என்ன சொன்னீங்க இப்ப என்ன செய்றீங்க படு பயங்கர கடுப்பில் படத்தில் இருந்து விலகிய தமன்னா ஹைதராபாத்: தமன்னா தெலுங்கு படம் ஒன்றில் இருந்து விலகியுள்ளார்.

ராஜு காரி காதி தெலுங்கு படத்தின் 3வது பாகத்தை எடுக்கிறார்கள். ஹீரோயினை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னாவை அணுகினார்கள். அவரும் நம்மை தேடி வெயிட்டான கதாபாத்திரம் வந்துள்ளதே என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.

படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விலகியுள்ளார் தமன்னா.ராஜு காரி காதி 3 படத்தை ஓம்கர் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் தமன்னா சந்தோஷமாக கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு அவருக்கு கதை பிடிக்காமல் விலகிவிட்டார். என்னிடம் கூறியது ஒரு கதை, ஆனால் இங்கு படமாக்கப்படுவது வேறு கதை. அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு கிளம்பியுள்ளார் தமன்னா.

தமன்னாவிடம் எதுவும் தெரிவிக்காமலேயே கதையை மாற்றியுள்ளனர். வேலை என்று வந்துவிட்டால் தமன்னா ரொம்ப சின்சியர். அவர் ஒப்புக் கொண்ட படம் குறித்த நேரத்தில் முடிய வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் உழைப்பவர். ராஜு காரி காதி 3 படத்தின் கதை பிடித்ததால் தான் அதில் நடிக்க 6 மாதங்களுக்கு முன்பே சம்மதம் தெரிவித்தார். ஆனால் இயக்குநர் தமன்னாவுக்கு தெரியாமலேயே கதையை மாற்றிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் பூஜை முடிந்த பிறகே கதையை மாற்றியது குறித்து தமன்னாவிடம் தெரிவித்தனர். புதுக்கதையை கேட்டு தமன்னா வியந்தார். அதன் பிறகே அவர் படத்தில் இருந்து வெளியேறினார். புது ஸ்க்ரிப்ட் பிடிக்காததால் படத்தில் இருந்து வெளியேறிவிடுவதே நல்லது என்று தமன்னா முடிவு செய்தார். சயீரா நரசிம்ம ரெட்டி, குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக், விஷாலுடன் ஒரு படம் என்று அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அந்த படங்களில் அவர் கவனம் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமானவர் கூறியுள்ளார்.

புது ஸ்க்ரிப்ட்டில் தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. அதனால் தான் அவர் விலகிவிட்டார். மேலும் அவரைத் தேடி ஒரு பெரிய பட வாய்ப்பும் வந்துள்ளது. அந்த படத்தில் கவனம் செலுத்த ராஜு காரி காதி 3 படத்தில் இருந்து விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.