நடிகர் விஜய் மற்றும் அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள். அவர்கள் இருவருடனும் ஒருகாலத்தில் சில படங்களில் நடித்தவர் வையாபுரி. அவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் அஜித்-விஜய் படம், பிக்பாஸ் என பல விஷயங்கள் செய்தாலும் தற்போதும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வருவதே இல்லையாம். அவராக தேடிச்சென்று பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

அஜித், விஜய் அகியோரையும் அவர் அணுகியுள்ளார், ஆனால் அவர்கள் எந்த வாய்ப்பும் வழங்கவில்லையாம். சமீபத்தில் விஜய் சேதுபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம் அவர். கண் எதிரிலேயே விஜய் சேதுபதி உடனே இரண்டு இயக்குனர்களுக்கு போன் செய்து வையாபுரிக்கு தகுந்த ரோல் இருந்தால் கொடுங்கள் என சொன்னாராம்.

எனக்கு நடிப்பதை விட்டால் வேறு எதுவும் தெரியாது, சிறுக சேர்த்து தற்போது என் மகனை மருத்துவம் படிக்க வைக்க போகிறேன், பிக்பாஸ் சென்றால் அதிகம் வாய்ப்புவரும் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை என வையாபுரி உருக்கமாக பேசியுள்ளார்.