சிவகார்த்திகேயன் அடுத்த படைப்பு வெளியான முக்கிய தகவல் இதோ சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான மிஸ்டர் லோக்கல் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாததால் வசூலும் குறைவு தான்.

இதனால் விமர்சனங்களையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். அவரின் தயாரிப்பில் அடுத்ததாக ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் வெளியாகி ஹிட்டானது.

இந்நிலையில் அவரின் தயாரிப்பில் அடுத்ததாக அவரின் சகோதரர் அருவி பட இயக்குனர் அருண் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளில் வெளியிட்டுள்ளார்.