பல வருடம் கழித்து முகவரி படத்தின் கிளைமேக்ஸ் நடந்த மாற்றம் இதுவரை வெளிவராத உண்மை தகவல் இதோ முகவரி தல அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம். வெற்றி பெற வேண்டும் என போராடுபவர்கள் அனைவருக்கும் இந்த படம் எளிதில் கனேக்ட் ஆகும்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் சாதிக்க முடியாமல் திரும்பி போவது போல் முதலில் காட்சிகளை எடுத்து படத்தை ரிலிஸ் செய்தனர்.

பிறகு அந்த கிளைமேக்ஸ் மாற்ற சொல்லி பலரும் சொல்ல, ரிலிஸான அன்றே ‘அஜித் கிளைமேக்ஸில் பெட்ரோல் பேங்கில் வேலைப்பார்ப்பது போலவும், அப்போது கே.எஸ்.ரவிகுமார் பெட்ரோல் போட வருகின்றார்.

அஜித்தை பார்த்தவுடன், தம்பி நீயா? ஏன் இந்த வேலைக்கு வந்தாய், உன் டியூன்கள் எனக்கு பிடித்திருந்தது, நீ தான் அடுத்தப்படத்தின் இசையமைப்பாளர்’ என சான்ஸ் கொடுப்பாராம்.

ஆனால், இதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என்னால் இப்படி ஒரு காட்சியை எடுக்க முடியாது, இந்த படம் நாவல் போல் உள்ளது, கெடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்படத்தில் பணியாற்றிய சுப்ரமணியசிவா கூறியுள்ளார்.