சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடர்பாக ரசிகர்கள் எதை நினைத்து பயந்தார்களோ அது தான் நடந்துள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இன்று காலை அலுவலகங்களுக்கு சென்று தூங்கியுள்ளனர். ஏன்யா, பிக் பாஸ் இப்படி இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சியை துவங்கி எங்களை சோதிக்கிற என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் தேர்வு குறித்து ரசிகர்கள் பயந்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் கெட்ட நேரம், அவர்கள் பயந்தது போன்றே நடந்துவிட்டது. அதாவது மார்க்கெட் இல்லாத நடிகர்கள், நடிகைகள், விஜய் டிவி பிரபலங்கள், சீனியர் நடிகர்கள் ஆகியோரை மட்டும் போட்டியாளர்களாக தயவு செய்து அழைத்து வராதீர்கள் பிக் பாஸ் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது பிக் பாஸ் 3 வீட்டிற்குள் இருப்பவர்களில் சித்தப்பு சரவணன், மோகன் வைத்யா, சேரன், பாத்திமா பாபு ஆகியோர் எல்லாம் சீனியர்கள். அதிலும் குறிப்பாக சொல்லப் போனால் மோகன் வைத்யா, சரவணன், பாத்திமா பாபுவால் எல்லாம் எப்படி டாஸ்குகளை செய்ய முடியும் என்பதே ரசிகர்களின் குமுறல்.

எந்த டாஸ்க் கொடுத்தாலும் வயதாகிவிட்டது, செய்ய முடியாது என்பார்களே என்பது தான் ரசிகர்களின் வருத்தம். இது என்ன பிக் பாஸ் வீடா இல்லை குட்டி முதியோர் இல்லமா என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடேங்கப்பா, இது எங்க லிஸ்டிலேயே இல்லையே என்று சேரனை பற்றி தான் ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ, பாவம் அவருக்கு கடன் பிரச்சனை இருப்பதால் பிக் பாஸ் வீட்டிற்கு வர ஒத்துக் கொண்டார் என்கிறார்கள்.

வனிதா விஜயகுமாரால் தான் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். சாக்ஷி அகர்வாலுக்கும், தர்ஷன், முகென் அல்லது கவினுக்கு இடையே காதல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிக் பாஸ் வீடு என்றால் ஒரு காதல் ஜோடி உருவாகியே ஆக வேண்டுமே. கடந்த இரண்டு சீசன்களில் அப்படித் தானே நடந்தது.