எப்ப பாத்தாலும் என்னை பார்த்து இப்படி சொல்லிகொண்டே இருக்காரே குமுறும் நடிகை சென்னை: நடிகை ஒருவர் தனது உடல் எடையை குறைத்த பிறகு தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தெரிவித்ததை கேட்டு கண் கலங்கிவிட்டாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த அழகான, திறமையான நடிகை. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பால் மிரட்டுவதற்கு பெயர் போனவர்.

உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளும் கை நழுவிப்போனது. நடிகையும் ஏதேதோ செய்தும் ஒன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து பாலிவுட் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு சென்று எடையை குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக திரும்பி வருவதை அறிந்தார் நடிகை. உடனே அவர் அடுத்த பிளைட்டை பிடித்து அந்த நாட்டிற்கு சென்று எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாக வந்தார். ஒல்லியான பிறகு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

நடிகை ஒல்லியான பிறகு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் அந்த நடிகையா இது, ஆளே மாறிவிட்டாரே, எங்க கண்ணையே நம்ப முடியவில்லையே என்றார்கள். நடிகைக்கும் பிரபல நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று பலகாலமாக பேசப்படுகிறது. அதை நடிகர் மறுத்தபோதிலும் யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்நிலையில் தான் ஒல்லிக்குச்சியாக மாறியது குறித்து நடிகர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நடிகை ஆவலுடன் இருந்தாராம்.

நடிகரோ தனது புதுப்பட வேலையில் பிசியாக இருப்பதால் நடிகையை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதனால் நடிகை கவலையில் இருந்தாராம். இது மோதல் அல்ல ஊடல் என்று திரையுலகினர் பேசிக் கொண்டனர். ஒரு வழியாக நடிகை எதிர்பார்த்தது நடந்துவிட்டது. அவர் உடல் எடையை குறைத்தது குறித்து நடிகர் கருத்து தெரிவித்துவிட்டார். ஆனால் நடிகை எதிர்பார்த்த கருத்து இது இல்லை.

நடிகை பூசினாற் போன்று இருந்தபோது தான் அழகாக இருந்தார், தற்போது ஒல்லியாக நன்றாகவே இல்லை என்று நடிகர் தெரிவித்துள்ளாராம். நடிகரின் இந்த கருத்து நடிகைக்கு தெரிய வர அம்மணி துக்கம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாராம். நடிகைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் மாப்பிள்ளை தான் அமைய மாட்டேன் என்கிறது. இதனால் பெற்றோர் கவலையில் உள்ளனர். அம்மணியோ படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.