இன்று இந்த இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகும் ஜாக்கிரதை இதுல உங்க ராசி இருக்கா உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
தொழில் தொடர்பான வெளியூா பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியிவ் ஈடுபடுவீர்கள். குடும்ப பொருளாதாரம் சம்பந்தப்பட்ட நிலை மேம்பட்டு நிற்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட திட்டங்களை வகுக்க முடிவு செய்வீர்கள். மனைவி வகையில் உங்களுடைய உறவுகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்

ரிஷபம்

உங்களுடைய அமைதியான செயல்பாடுகளால் பெரும் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். சொன்ன வாக்குறுதிகளைச் சொன்ன விதத்தில் நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். காதுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

தொழிலை முன்னேற்றுவதற்கான புதிய முயற்சிகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்ய அவசியம் உண்டாகிறது. உங்களுடைய உயர் அதிகாரிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். மனதுக்குள் உள்ள புதுவுிதமான சிந்தனைகள் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்திட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை அடைவீர்கள். கல்வி மற்றும் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்

உங்களுடைய புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதுக்குள் நினைத்து வைத்திருந்த புதிய செயல்திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். வெளியூா தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு லாபம் உண்டாகும். பணிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைச் சுமூகமாக முடிக்க முயுற்சி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கையினால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீகும் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

புதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிநது கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

தொழில் சார்ந்த தவையில்லாத அலைச்சல்களின் மூலமாக உங்களுக்கு பெரும் அலைசசல்கள் உண்டாகலாம். வெளிவட்டாரத் தொடர்புகளின் மூலமாக உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் யாவும் நீங்கள் நினைத்த பலன்களை அளிக்கக்கூடியது. சொந்த ஊருக்குப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்பபுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

தொழிலில் உங்களுடைய புதிய நபர்களுடைய முதலீடுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீஙகள்இழந்த பொருள்களை மீட்பதற்கு உரிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட புச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமான இருக்கும். சர்வதேசம் சம்பந்தப்பட்ட வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். தந்தையினுடைய ஆதரவினால் இதுவரை இருந்து வந்த வீண் கவலைகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

பணியில் உங்களுடைய பொறுப்புகள் உயர ஆரம்பிக்கும். நீங்கள் செய்கின்ற தொழிலின் வாயிலாக உங்களுக்கு புதிய முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. கோவில் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு பெரும் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

வெளியூரக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் வாயிலாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். உங்களுடைய தொழிலுக்கு நண்பர்களுடைய ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்

முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மிகவும் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்கு உண்டாகும். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

நீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகளும் ஆதரவும் பண உதவியும் கிடைக்கும். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு தங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எண்ணிய லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் பயில்கின்ற விதத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய விவாதங்களினால் பெரும் புகழ் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.