ஏன்ஜெல்லாக வளம் வரும் நயன்தாரா அதுவும் எந்த படத்தில் தெரியுமா நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏன்ஜெல்’ என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.