பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரிக்கு ஏற்பட்ட உச்ச கட்ட கொடுமை ரசிகர்கள் வேதனை மும்பை: நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். பத்திரிகையாளரான அவரை ஒரு தீவிரவாதி என்று கூறி என் தந்தை எதிர்க்கிறார் என பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா ஒரு இஸ்லாமியரை காதலிப்பதாகவும், அதற்காக குடும்பத்தார் அவரை அடித்து துன்புறுத்துவதாகவும் நடிகை கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி நேற்று ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் தனக்கு உதவி செய்யுமாறு கூறி சுனைனா கங்கனாவுக்கு போன் செய்து அழுவதாகவும் ரங்கோலி கூறினார்.

இந்நிலையில் சுனைனா தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். காதல், குடும்பம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, நான் இஸ்லாமியர் ஒருவரை காதலிப்பதால் என் தந்தை என்னை அறைந்தார். நீ காதலிப்பது ஒரு தீவிரவாதியை என்றார். ஆனால் ருஹைல் தீவிரவாதி இல்லை. அவர் தீவிரவாதியாக இருந்தால் போலீசார் எப்படி சும்மாவிட்டிருப்பார்கள், அவர் எப்படி பத்திரிகையாளராக இருக்க முடியும். இந்நேரம் அவர் சிறையில் அல்லவா இருந்திருப்பார்?

நான் கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் ரூஹைலை சந்தித்தேன். என் பெற்றோர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் அவரின் செல்போன் எண்ணை சேவ் செய்யவில்லை. மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் பலாசோ அபார்ட்மென்ட்டில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். பின்னர் அங்கிருந்து வெளியேறி தனியாக வசித்தேன். கடந்த வாரம் தான் மீண்டும் பெற்றோரிடமே திரும்பிச் சென்றேன்.

ருஹைலின் அலுவலகம் மூலம் அவருடன் டச்சில் இருந்தேன். அவர் பெயர் ருஹைல் அமின். அவர் ஒரு பத்திரிகையாளர். என் குடும்பத்தார் ருஹைலை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். குடும்பத்தார் சேர்ந்து என் வாழ்க்கையை நரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னால் அதை தாங்க முடியவில்லை. நான் ருஹைலை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். திருமணம் பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் நான் ருஹைலுடன் இருக்க விரும்புகிறேன். அவர் ஒரு முஸ்லீம் என்பதற்காக அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர் ஒரு தீவிரவாதியாக இருந்தால் மீடியாவில் இருக்க முடியுமா, கூகுள் முழுவதும் இருக்க முடியுமா?.

ரித்திக் ரோஷன் உள்பட யாருக்குமே என் காதல் பிடிக்கவில்லை. மும்பையில் எனக்கு ஒரு வீடு வாங்கித் தருவதாக ரித்திக் கூறினார். ஆனால் அவர் சொன்னது போன்று இதுவரை செய்யவில்லை. நான் அண்மையில் தான் கங்கனாவை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். கங்கனாவுக்கு நீதி வேண்டும், எனக்கும் தான் என்கிறார் சுனைனா.