தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு சினிமா துறையிலும் பல்வேறு பிரபலங்களும் இவருக்கு ரசிகராக இருந்து வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமே நடிப்பையும் தாண்டி அஜித்தின் நல்ல குணம் தான்.

அஜித்துடன் பணியாற்றிய பலரும் அவரை பற்றி புகழ்ந்து தான் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வரும் இயக்குனர் வினோத் அஜித் குறித்த பல்வேறு விடயங்களை தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில், அஜித்தின் எளிமை கண்டு நான் மிகவும் ஆச்சார்யபட்டுளேன். படப்பிடிற்குள் நான் சென்றதும் அவர் எழுந்து நின்று என்னை அமர சொல்வார்.

இந்த மரியாதை எனக்கு மட்டும் இல்லை அங்கு பணிபுரியும் லைட் மென் முதல் அனைவரையும் அவர் அப்படி தான் ட்ரீட் செய்வார்.

அஜித்தை பற்றி தெரியாத பல விஷயங்கள் உள்ளது, அவர் தினமும் சாப்பாடு கட்டிக்கொண்டு எம் ஐ டி க்கு சென்று பசங்களுக்கு ட்ரோன் சம்மந்தமான வகுப்புகள் எடுத்து வருகிறார்.

எப்போதும் அவரை பிசியாக வைத்துக் கொள்கிறார். சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை சந்தித்த போது அவர் எனக்கு ஒரு விஷத்தை சொன்னார்.

ஒரு முறை அஜித் வீட்டில் போன் வேலை செய்யாமல் போய்யிருக்கு அப்போது அதை பழுது செய்ய டெலிபோன் டெபார்ட்மெண்ட்ல இருந்து ஒருத்தர் வந்திருக்கார்.

அஜித் சார் வீடு என்று தெரிந்தவுடன் அந்த நபர் எதாவது கவனிங்க என்று சொல்லி இருக்காரு. இத கேள்விபட்டு அந்த நபரை அழைத்து அஜித், உங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கறாங்க இல்ல அப்புறம் ஏன் காசு கேக்குறீங்க. உங்க வேலைய சரியா பண்ணுங்க, இப்படி காசு எல்லாம் கேக்க கூடாதுனு சொல்லி அனுப்பிருக்கார்.

அவர் நெகிழ்ந்து போய் இனி யார்ட்டயும் பணம் கேட்க மாட்டேன் சார் என்று சொல்லிட்டு கிளம்பி இருக்கார்.
அதன் பின் ஒரு ஆறு மாசம் கழித்து தனது மேனேஜரிடம் சார் அந்த போன் ஆபரேட்டர் தனக்கு 2 பெண் குழந்தை இருக்கு என்று சொன்னரே அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட ஏதவது உதவி வேணுமான்னு கேளுங்கனு கேட்டு அவங்களுக்கு பீஸ் கட்டி இருக்காரு.

வெறும் 500 ரூபாய் டிப்ஸ் தர மறுத்த அஜித், குழந்தைங்களுக்கு பீஸ் கட்டி இருக்காரு இப்படியான நபர் தாங்க அஜித்னு மிகவும் பெருமையாக கூறி முடித்தார் வினோத்.