இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் அமீர் மற்றும் ரியாஸ் இருவரும் எச்ச வேலை ஒன்றை செய்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அமீர் ஒரு மிகச் சிறந்த பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைபற்றி இருந்தார் அமீர். இந்த நிலையில் இந்திய அணியுடன் நடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது முதல் 15 ஓவர்களுக்குள் அமீர் 4 ஓவர்களை வீசினார்.

4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதேபோல ஒரு ஓவரை மெய்டனும் செய்தார். அமீரின் ஓவரை தவிர மற்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் அடித்து பறக்கவிட்டனர். ஆனால் அமீர் ஓவரில் மட்டும் அதிகமாக ரன்கள் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் போட்டியின்போது அமீரை 2 முறை நடுவர்கள் எச்சரித்து உள்ளனர். அமீர் 3வது ஓவரை வீசும்போது பந்து பிட்ச் ஆகக்கூடிய இடத்தில் ஓடி பிட்சை சேதப்படுத்தினார்.

கிரிக்கெட் விதிமுறைப்படி பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் இருவருமே பந்து பிட்சாகும் இடத்தில் ஓடக்கூடாது. அமீர் இதை 3வது ஓவரில் செய்தார். அதேபோல 5வது ஓவரை வீச வந்தபோதும் இதையே மீண்டும் செய்தார். அமீர் இதை வேண்டுமென்றே செய்தது போலத்தான் இருந்தது. 2வது முறை செய்தபோது நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத வெறி அதிகமாக இருந்திருக்கும்.

காரணம் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் அவர்தான். மீண்டும் ஒருமுறை இதே போல அமீர் செய்திருந்தால் அவரை ஆடுகளத்தில் இருந்து வெளியேறும் தண்டனையை நடுவர்கள் கொடுத்திருப்பார்கள். அதுதான் விதிமுறை. அமீருக்கு இது நன்றாக தெரியும் போலிருக்கிறது காரணம் 2 முறைக்கு மேல் இதை அவர் செய்யவே இல்லை. அதேபோல பாகிஸ்தான் அணி வீரர் ரியாசும் 24வது ஓவரை வீசும்போது இதையே செய்தார்.

இவருக்கும் நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்த இப்படி எச்ச வேலை செய்ய வேண்டுமா என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். சரி, பாகிஸ்தான் அணி செய்த இந்த எச்ச வேலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?