2019 ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ள அணியை முன்னாள் இந்திய நட்சத்திரம் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர ஆட்டகரராக திகழ்ந்த இடது கை துடுப்பாட்டகாரர் யுவராஜ் சிங் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ள அணிகள் குறித்து யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நடைபெற்று வரும் உலகக் கோப்பை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அல்லது நியூசிலாந்து அணிக்கு கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என கூறியுள்ளார்.