நடிகர் விஷாலுக்கு தற்போது போதாத காலம் போன்று அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை மாற்றிக் கொண்டு வருகிறார் தற்போது சமூகவலைதளத்தில் கொங்கு நாட்டு இளவரசி எனும் பெயரில் இருக்கக்கூடிய விஷ்வ தர்ஷினி தற்போது நடிகர் விஷால் மீது சமூகவலைதளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார் .அதில் அவர் கூறியதாவது நடிகர் விஷால் என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை பார்ப்பதற்காக இரவில் அடிக்கடி அந்த வீட்டின் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்வார் என கூறியிருந்தார் இது பரவலாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் நடித்த நடிகை காயத்ரி என்பவர் போலீஸ் ஆணையரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்தார் .அதில் சமூகவலைதளத்தில் கொங்கு நாட்டு இளவரசி எனும் பெயரில் இருக்கக்கூடிய விஷ்வதர்ஷினி என்னுடன் சமூக வலைதளத்தை அறிமுகம் ஆனார் தொடர்ந்து நட்பாக பழகிய விஷ்வ தர்ஷினி அடிக்கடி என் வீட்டிற்கு வருவார் .அப்போது அவசரத் தேவைக்காக என்னிடம் இருபதாயிரம் ரூபாய் வாங்கியிருந்தார். அந்த ரூபாயை திருப்பிக் கேட்ட எனக்கும் விஸ்வ தர்ஷினுக்கும் இடையே சிறிது பிரச்சினை ஏற்பட்டது இதனால் அவர் என்னுடைய மகளை நடிகர் விஷாலுடன் இணைத்து தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் எனவும் நடிகர் விஷால் என்னுடைய நெருங்கிய நண்பர் எனவும் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் என கூறியிருக்கிறார்