மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான வெற்றி திரைப்படம் பிரேமம் இத்திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து இருப்பார் மேலும் இவருடன் கதாநாயகிகளாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் ,மடோனா செபாஸ்டின் போன்ற நடிகைகள் நடித்து இருப்பார்கள். இதில் நடித்த அனைவரும் தற்போது மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள் நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார் .ஆனால் நடிகை மடோனாவிற்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் தற்போது இல்லை நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் இதுவரை நடிகர் தனுஷுடன் கொடி எனும் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் இவர் கதாநாயகியாகவும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். தொடர்ந்து பணிச்சுமை காரணமாக அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதனால் இவர் படுக்கையில் இருந்தவாறு காய்ச்சல் முகம் எனக்கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்