விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து இந்த நடிகை மானசா, இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

“ராஜா ராணி ” சீரியலில் அழகான குடும்ப பெண்ணாக நடித்து வரும் மானசா அதே சீரியலில் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விஜய் தொலைக்காட்சியே மிகவும் பிரம்மாண்டமாக நிச்சயதார்தததையும் நடத்தி வைத்தனர். விரைவில் இவர்கள் திருமணமும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆல்யா மானஸாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.