அதை நினைத்து நினைத்து வீட்டில் கதறி அழுத யுவராஜ் சிங் மனைவி கூறிய மிகவும் உருக்கமான தகவல் இதோ ஓய்வை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து அழுததாக அவருடைய மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பானது முன்னணி வீரர்கள் துவங்கி அவருடைய ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஹஷெல் கீச், ஒரு மனைவியாக கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன்.

யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் ஆண்டு யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பியிருந்தது. அதனை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் அந்த உணர்ச்சியினை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.