இந்த அணி வந்தா ரொம்ப நல்லா இருக்கும் என மறைமுகமாக விஜய் சேதுபதி கூறியது எந்த அணி தெரியுமா சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

இரண்டு ணிகளும் சமபலத்தில் இருப்பதால், போட்டி கடுமையாக உள்ளது. இதனால் முன்னணி நடிகர்களின் ஆதரவை பெற இரு அணிகளும் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, நடிகர் சங்கத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து விளக்கமளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து பின்னர் தெரிவிப்பேன். நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும்.

சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளனர். அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும். சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் வழி வகுக்க வேண்டும்.

நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டி போடும் இரண்டு அணிகளுமே எனக்கு பழக்கமானவர்கள் தான். இரண்டு அணிகளில், ஒரு அணியினர் மட்டும் என்னிடம் வந்து பேசியுள்ளனர். அவர்கள் சொல்வது நடந்தால் நன்றாக இருக்கிறது. ஆனால், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்வேன்”, என விஜய் சேதுபதி கூறினார்.