உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனங்கள் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

மனதில் துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். மனைவியின் உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் மூலமாக சோர்வுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். உங்களுக்கு இருந்து வந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களின் மூலம் திருப்திகரமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலமாக செய்கின்ற செயல்களில் வெற்றி கிட்டும். மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான செயல்களின் மூலமாக கொஞ்சம் நிதானம் தேவை. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்

தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில காரியத் தடைகள் உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி

வீட்டில் இருப்பவர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். புதிய பயணங்களின் மூலமாக தொழிலும் மற்ற செயல்களிலும் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் கொஞ்சம் கால தாமதமாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் உங்களுக்குக் கை கூடி வரும். பொருளாதார ரீதியாக வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இவரை இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடமே திரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் திட்டமிட்டு வைத்திருந்த பணிகளை நீங்களே முடிப்பது தான் நன்மை. வேறு யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

அந்நியர்களின் மூலமாக நீங்கள் எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வாக்குறுதிகளால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும். பொருளாதார நெருக்கடியினால் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு

மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களால் மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

செய்யும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். தலைமைப் பதவியில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான விஷயங்க்ள உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் கலந்து கொள்பவருக்கு மேன்மையும் பெருமையும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறங்களாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்

கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் நீங்கி, அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலமாக பெருமையடைவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சுப செய்திகள் வந்து சேரும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

பயணங்கள் மேற்கொள்வதினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். உறவினர்களுடன் வீண் விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. செய்கின்ற காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டாலுமட உங்களுக்கு சாதகமான பலன்களே உண்டாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் உங்களுக்கு பதற்றமான சூழல்கள் உருவாகும். எதையும் செய்து முடிக்கின்ற சாமர்த்தியமும் மன தைரியமும் உங்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.