அன்றே அஜித் இதை செய்து இருந்தால் அவருடைய ரேஞ்சே வேற ஆயிருக்கும் நரேன் கூறிய தகவல் அஜித் மட்டும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பைக் ரேசிங் வந்து இருந்தால் அவர் இன்று சினிமாவை விட்டு ரேஸர் ஆகவே இருந்து இருப்பார் என்றார்.

‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவருக்கு நடிப்புக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த விஷயம் பைக் ரேஸ் இவர் ஃபார்முலா ஒன் பந்தயத்திலும் பங்கேற்றுள்ளார்.

இவருடைய பைக் ரேஸ் அனுபவம் குறித்து நரேன் கார்த்திகேயன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது அஜித் மட்டும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பைக் ரேசிங் வந்து இருந்தால் அவர் இன்று சினிமாவை விட்டு ரேஸர் ஆகவே இருந்து இருப்பார் என்றார்.