கமலுக்கு பிறகு இந்த பெருமையை பெற்ற தமிழ் சினிமாவின் ஒரே மாஸ் ஹீரோ தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு நடப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கபடும் கமலஹாசன் அவர்கள். மிகச்சிறிய வயதிலேயே கலையுலகில் காலடி வைத்த இவர் தனது முதல் படத்திலயே இந்திய சினிமாவால் திரும்பி பார்க்கபட்டவர். தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கமல் அவர்கள் பல புதிய தொழில்நுட்பங்களையும் தமிழ் சினிமாவில் புகுத்தியவர்.

நடிகர், நடன ஆசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என 50-ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பல்கலை கலைஞனாக வலம் வருபவர் கமல் அவர்கள். இவர் நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை,போடாத வேஷங்கள் இல்லை. தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு சில இந்திய நடிகர்களில் இவர் முக்கியமானவர்.

தமிழ் சினிமாவை தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல இந்திய மொழிகளில் நடித்த இவர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். குறிப்பாக பிலிம்பேர் விருதுகள். இந்த விருதினை அதிக முறை பெற்ற நடிகர் மற்றும் தொடர்ந்து 4-வருடங்கள் இந்த விருதினை வென்ற பெருமை கமல் அவர்களை சாரும். முறையே 1975,76,77,78 ஆகிய வருடங்களில் இந்த விருதுகள் கமலுக்கு வழங்கபட்டது.

இந்நிலையில் கமல் அவர்களுக்கு பிறகு இந்த விருதினை தொடர்ந்து மூன்று வருடங்கள் பெற்றவர் யார் தெரியுமா…

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கொரு இடம் பிடித்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள். காலத்தின் ஓட்டத்தில் தவறான கொள்கையாலும், கால்ஷீட் சொதப்பல் போன்ற காரணங்களாலும் தமிழ் சினிமாவிலிருந்து இவர் விலகி இருந்தாலும் இவரை பாேன்ற மிகச்சிறந்த எதார்த்த நடிகருக்கான இடம் காலியாகவே உள்ளது.

இவரிடம் குறைகள் பல இருந்தாலும் ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் காண முடியும். குறிப்பாக படித்த நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடிய அப்பாவியான கேரக்டர் என்றால் அனைவருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருவது கார்த்திக் அவர்கள் நடித்த கோகுலத்தில் சீதை திரைப்படம்தான்.

இப்படத்தில் இவரது நடிப்பு பல தமிழ் நடிகர்களுக்கு ஒரு பாடமாகவும், தாக்கத்தையும் கொடுத்தது. குறிப்பாக பிரியமானவளே படத்தில் விஜயின் நடிப்பில் கார்த்திக்கின் தாக்கத்தை காணலாம். அதே போல துறுதுறுப்பான ரொமாண்டிக் காதலன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அந்த மெளனராகம் கேரக்டர்தான்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கார்த்திக் அவர்களும் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுககளை பெற்றுள்ளாார். குறிப்பாக உலக நாயகன் கமல் அவர்களுக்கு பிறகு தொடர்ந்து 3-முறை பிலிம்பேர் விருதினை வென்ற பெருமை கார்த்திக் அவர்களையே சாரும். 1988,89,90-ஆகிய வருடங்களில் முறையே அக்னி நட்சத்திரம், வருஷம்-16, கிழக்கு வாசல் ஆகிய படங்களுக்காக இந்த விருது இவருக்கு வழங்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.