முக்கியமான சென்டிமென்டை தவிர்த்த அஜித் ஏன் தெரியுமா அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலிஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

பொதுவாக அஜித் சாய் பாபாவின் தீவிர பக்தர் என்பதாலும் கடைசி நான்கு படங்களின் இயக்குனர் சிவாவும் சாய் பாபாவின் பக்தர் என்பதாலும் இவர்கள் கூட்டணியில் உருவாகிய அனைத்து படங்களின் அப்டேட்டும் சாய் பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையே வெளியானது.

ஆனால் நேர் கொண்ட பார்வையின் இந்த அப்டேட் புதன்கிழமையில் வெளியாகியுள்ளது. இதை அறிந்த தல ரசிகர்கள் அஜித் தனது ராசியை கைவிட்டாரா என்று குமுறி வருகின்றனர்.