நடிகர் கொட்டாச்சி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார் ஆரம்ப காலங்களில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த கொட்டாச்சி தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நட்சத்திரம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கொட்டாச்சி அதனைத் தொடர்ந்து காவியத்தலைவன் , கடவுளுக்கு நன்றி ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய ஓட்டுநர் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து இவருடைய நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர் இது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை தற்போது உள்ளது.இவருடைய மனைவி மற்றும் மகள் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இவருடைய மகள் தான் நயன்தாரா நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படமான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து அசத்தி இருப்பார் தற்போது இந்த குழந்தை பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறது