இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடக்க இருக்கிற்து. இது சம்மந்தமாக இரு நாட்டிலும் ஒளிப்பரப்பு உரிமையைக் கைப்பற்றியிருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்ற நாட்டை இழிவுபடுத்துவது போல விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஒளிப்பரப்பு உரிமையைப் பெற்றுள்ள ஜாஸ் டிவி பாகிஸ்தானில் ராணுவத்தில் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர் அபிநந்தனைக் கொண்டு கேலியான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தில் அபிநந்தனைப் போலவே மீசை வைத்திருக்கும் ஒரு நபரிடம் சிலக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையெல்லாவற்றுக்கும் அவர் கோப்பையில் தேநீர் அருந்திக்கொண்டே, ‘நான் அதைப் பற்றி சொல்லக் கூடாது’ என்று சொல்கிறார். ஆனால் டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் நன்றாக இருக்கிறது எனப் பதில் அளிக்கிறார். கடைசியில், ‘சரி, நீங்கள் கிளம்புங்கள்’ என்று சொன்னதும் அந்த நபர் அங்கிருந்து நகர்கிறார். அப்போது அவரை நிறுத்தி, அவர் கையிலிருக்கும் தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டு அனுப்புவது போலவும் காட்சிப்படுத்தி ‘கப்பை வீட்டுக்குக் கொண்டுவருவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் கோபம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விளம்பரத்துக்கு மூலகர்த்தாவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் என்றும் அவர்கள் பாகிஸ்தான் மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளை சீண்டும் விதமாக விளம்பரம் வெளியிட்டார்கள் என்றும், இது அதற்கான எதிர்வினைதான் என்றும் கருத்துக் கூறப்படுகிறது.