நேற்று நடந்த ஆஸ்ட்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிக்கர் தவான், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியில் இந்திய அணி 352 ரன்கள் குவித்து 36 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலியின் செயலால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மனம் நெகிழ்ந்து போய்விட்டனர்.

அதிலும் விராட் கோலி எதிரணி வீரருக்காக போராடி இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய காரணத்தால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தனர். மீண்டும் இவர்கள் இப்போது அணியில் இடம்பிடித்து விளையாடினாலுமே கூட இன்னும் ஸ்டீவ் ஸ்மித் பந்தை கேட்ச் பிடிக்கும் போதும், ஃபீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் ஸ்மித்துக்கு எதிரான விமர்சனங்களையும், கருத்துகளையும், செயல்களையும் தான் செய்து வருகிறார்கள்.

நேற்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஃபோர் லைனில் நின்று பந்தை பிடித்தார். அப்போது இந்திய ரசிகர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அப்போது விராட் கோலி ரசிகர்களை நோக்கி கை காட்டி ஏன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்… எதிரணி வீரராக இருந்தாலும் சப்போர்ட் செய்யுங்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்த விஷயம் இந்திய ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஆஸ்ட்ரேலிய ரசிகர்களையும் சேர்த்து நெகிழ வைத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தும் விராட் கோலியிடம் கை கொடுத்திருப்பார். ஸ்டீவ் ஸ்மித்தும் நல்ல வீரர்தான். அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். அதுபோன்ற ஒரு சூழலில் இது தான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரருக்கு அடையாளம் என்று விராட் கோலிக்கு ரசிகர்கள் பாராட்டுகளை கூறி வருகிறார்கள். சரி, கோலி செய்த இந்த நெகிழ்ச்சியான விஷயத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?